Tamil

தமிழ்

விக்டோரிய அரசு நிறுவனம் அல்லது உள்ளூர் நகராட்சியால் நீங்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டிருக்கிறீர்களா?

உங்களிடம் புகார் ஏதேனும் உள்ளதா?

விக்டோரிய மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நகராட்சிகள் பற்றிய புகார்களை விக்டோரிய குறைதீர்ப்பாயம் (Ombudsman) விசாரிக்கிறது. அரசுப் பள்ளிகள், விக்டோரியச் சாலைகள் (VicRoads), விக்டோரியச் சீர்திருத்தமனைகள் (Corrections Victoria), குடும்பங்களுக்கான திணைக்களம் (Department of Families), நியாயம் மற்றும் வீட்டுவசதி (Fairness and Housing), போக்குவரத்து விபத்து ஆணையம், தொழிலாளர் இழப்பீடு (WorkCover), மற்றும் பல இதில் அடங்கும். யாராயிருந்தாலும் புகார் அளிக்கலாம்.

உங்களிடம் புகார் ஏதேனும் இருந்தால்

முதலில் மாநில அரசு நிறுவனம் மற்றும் உள்ளூர் நகராட்சியுடன் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கவும்.

உங்கள் புகாரை நிறுவனம் அல்லது நகராட்சி கையாண்ட விதத்தில் நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், விக்டோரிய குறைதீர்ப்பாயத்தைத் (Ombudsman) தொடர்பு கொள்ளவும்.

மொழிபெயர்த்துரைப்பாளர்

உங்கள் மொழியில் உதவி தேவைப்பட்டால், காலை 9 மணி - மாலை 4 மணி, திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, 131 450 என்ற எண்ணை அழைத்து, விக்டோரிய குறைதீர்ப்பாயத்தைத் (Ombudsman) (1800 806 314) தொடர்பு கொள்ள வேண்டுமெனக் கேட்கவும். அல்லது complaints@ombudsman.vic.gov.au என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் மின்னஞ்சல் அனுப்பலாம்.